வெலிக்கடைப் சிறைச்சாலையில், குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட அரசியல் கைதிகள் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டு 30 வருடங்களின் பின்னர் அதற்கான நினைவு நாள் ஒன்று பாரிசில் நடைபெற்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நினைவு நாள் நிகழ்வை நடத்தியது பிரான்ஸ் இலங்கைத் தூதரகத்தின் ஆசியோடு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையர் ஒருமைப்பாட்டு மையமாகும். பேரினவாதத்தால் கண்கள்ன் தோண்டப்பட்டு, உறுப்புக்கள் அறுக்கப்பட்டு விலங்குத் தனமாகக் கொல்லப்பட்ட கைதிகளின் நினைவஞ்சலியைப் அதே பேரினவாதத்தின் தொங்குதசைகளே நடத்தின. தேசியத்திற்காகப் போராடுகிறோம் என்று மக்களின் அவலங்களை விற்றுப் பிழைப்பு நடத்தும் புலி சார் அமைப்புக்களோ இவைகளைக் கண்டுகொள்வதில்லை.
ஈ.பி.டி.பி, சிறீ டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்-பத்மநாபா-, பிள்ளையான் குழு போன்றவற்றின் ஆதரவோடு இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்திவிட்டுத் திரும்பியவர்களும் தமிழ் மக்கள் உரிமைக்காகப் போராடவேண்டும் என்று வேறு போட்டுவைத்திருக்கிறார்கள். ஆடு நனைகிறது என்று ஓனாய்கள் இரத்தக்கண்ணீரே வடிக்கின்றன.