Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைப் போலிசின் ஆதரவோடு பொது பல சேனா பயங்கரவாதிகளின் பூஜை

Gotabaya_Rajapaksa_Bodu_Bala_Sena‘மனவுறுதிப் பூஜை’ என்ற பெயரில் கண்டி தலதா மாளிகைக்கு எதிரே இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் ஒன்றை நடத்த பொதுபலசேனா ஏற்பாடு செய்துள்ளது. இது, அளுத்கமவில் முஸ்லிம்களை தாக்குவதற்கு முன்னர் மக்களைத் தூண்டுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம் போன்ற ஓர் ஏற்பாடே என்று கண்டிப் பகுதி முஸ்லிம்கள் அச்சமடைந்துள்ளனர். கண்டி, மீரா மக்கம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இந்தப் பூஜை ஏற்பாடு மேலும் பீதியைக் கிளப்பியிருக்கின்றது.

மேற்படி மனவுறுதி பூஜையில் பங்குபற்றுவதற்காக இலங்கையின் நான்கு திசைகளிலிருந்தும் வரும் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொதுபலசேனா பொலிஸாருக்குக் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது.மத ரீதியான பகையுணர்வைத் தூண்டும் எல்லாக் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிப்பது என பொலிஸ்மா அதிபர் தீர்மானித்துள்ள போதிலும், இந்த மனவுறுதி பூஜை என்ற ஒன்றுகூடலுக்கு தடை விதிக்க முடியாது என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கை, இந்திய மற்றும் மேற்கு ஏகதிபத்தியங்களின் உற்பத்தியான பொது பல சேனா என்ற நாசகார அமைப்பு தமது கிரிமினல் நடவடிக்கைகளை தமது எஜமானர்களின் நோக்கங்கள் நிறைவேறும் வரை தொடர்வார்கள். உலகம் முழுவதும் இராணுவப் பேண்தகமையை ஏற்படுத்துகிறோம் என்று ராஜபக்ச போன்ற பாசிஸ்டுக்களையும், பொதுபல சேனா போன்ற பயங்கரவாதக் குழுக்களும் உலகின் அதிகார மையங்கள் இணைந்து உருவாக்கி வருகின்றன.

Exit mobile version