சீனா – இந்தியா இணைந்த ஆசியப் பொருளாதாரத்தின் அடுத்த கோரப் படுகொலைகள் மியான்மாரில் அரங்கேறலாம் என்ற அச்சம் பரவாலக நிலவுகிறது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் விழ்ச்சியின் சற்றுப் பின்னதாக இலங்கைச் சர்வாதிகாரி ராஜபக்ச மியான்மாருக்கு விஜயம் மேற்கொண்டார். கிம் ஜொலீப் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி மியான்மார் சர்வாதிகார அரசு இலங்கையின் அதே வழிமுறையை மியான்மார் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழிப்பதற்குப் பயன்படுத்தலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் கொயின் தந்திரோபாயத்தை மியான்மார் அரசு பயன்படுத்த ஆரம்பிபதற்கான சுட்டிகள் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார். மியான்மார் அரசின் அழிப்பு நடவடிக்கை ஆரம்பித்துள்ள நிலையில் கடந்த வாரம் ஆயிரக்கணக்கான அகதிகள் தாய்லாந் எல்லைப்பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளனர்.
மக்கள் அழிப்பினை அடிப்படையாகக் கொண்ட இவர்களின் போர்த் தந்திரோபாய முறைக்கு எதிராக 6 வெறுபட்ட இனங்களைச் சேர்ந்த 60 ஆயிரம் போராளிகள் இணைந்து ஒரு பாதுகாப்புக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். புதிய போர்ப் பிரபுகளான சீனா – இந்தியா இணைந்த யுத்தக்களம் இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொள்ளப் போகின்றனவோ என்பது ஒரு புறம் துயர் தர மறுபுறத்தில் மியான்மார் மனித அழிப்பிற்கு எதிராக நாம் குரல்கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமையைப் புரிந்துகொள்ள வேண்டும்.