Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைப் படுகொலைகள் : நவநீதம்பிள்ளை கவலை

வன்னிப் பிரதேசத்தில் சுமார் 250,000 சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
 
யுத்தம் காரணமாக அதிகளவான சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
சுயாதீன கண்காணிப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் வன்னிக்கு சுதந்திரமாக செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த சில மாதங்களாக வன்னிச் சிவிலியன்கள் அடிக்கடி உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சிவிலியன்களை விடுதலைப் புலிகள் மனிதய கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும், அரசாங்கத்தினால் உத்தரவாதமளிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்களின் மீது படையினர் எறிகணைத் தாக்குதல் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக தமது கவலையை வெளியிட்டுள்ளதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கம் இராணுவ வெற்றிகளை ஈட்டும் அதேவேளை, சட்டம் ஒழுங்களை நிலைநாட்டத் தவறியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பல்வேறு இனத்தவர்களையும் மாற்றுக் கருத்துடையவர்களையும் சமநிலையில் பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசாங்கங்களினதும் தலையாய கடமை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
சிவிலியன்கள் மட்டுமன்றி ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலளர்களையும் இலங்கை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

Exit mobile version