போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அட்மிரல் திசார சமரசிங்க 2009 இல் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, நாட்டை விட்டு வெளியேற முயன்ற அகதிகளை தடுத்தமைக்காக பெருமையாகப் பேசியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது தலைக்கு மேலே போர்க்குற்றச்சாட்டுகள் தொங்குவதாக செனட் உறுப்பினர் றியனொன் தெரிவித்துள்ளார்.
ஆனால், அட்மிரல் சமரசிங்கவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை தாம் நான்கு மாதங்களுக்கு முன்னரே தள்ளுபடி செய்து விட்டதாக அவுஸ்ரேலிய சமஸ்டி காவல்துறை உறுதி செய்துள்ளது.
இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் திசார சமரசிங்க அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக இலங்கையால் நியமிக்கப்பட்டபோது, அவுஸ்ரேலிய வெளிவிவகாரத் திணைக்களம் அதை சிக்கலுக்குரியதாக நோக்கியது.
அவர் திசார சமரசிங்க, போரின் இறுதிக்காலத்தில் கடற்படைத் தளபதியாகப் பணியாற்றியிருந்தார்.
இதேவேளை, சமர்ப்பிக்கப்பட்ட தகவல் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், அட்மிரல் திசார சமரசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படாது என்றும் சமஸ்டி காவல்துறை பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 3ஆம் திகதி இந்த முடிவு அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவுக்கு கூறப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.