Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைத் தமிழ் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க நோர்வேயிலிருந்து சிறுகதைப் போட்டி

nor.competition_12cm-1நோர்வேயில் தமிழ் மொழிக்கல்வியில் தனது 25 வது ஆண்டை நிறைவு செய்யும் வேளையில் இலங்கை மாணவர்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கு முகமாக சிறுகதைப் போட்டியினை நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்துகிறது.

முதற்பரிசு: 10,000 ரூபாய் இரண்டாம்பரிசு: 5,000 ரூபாய் மூன்றாம் பரிசு: 3,000 ரூபா ய்

மேலதிகமாக, தெரிவு செய்யப்படும் ஐந்து கதைகளுக்கு தலா 1000 ரூபாய் விகிதம் பரிசாக வழங்கப்படும்
போட்டி நிபந்தனைகள்:
1. இலங்கைப் பாடசாலை மாணவர்கள் அனைவரும் இப்போட்டியிற் பங்குபற்றலாம்.
2. கதைகள் மாணவரது கையெழுத்தில் எழுதப்பட்டுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும்.
3. கதைகள் மாணவரது சொந்தப் படைப்பு என்பதைப் பாடசாலை அதிபர்; கையெழுத்திட்டு உறுதிப்படுத்த வேண்டும்.
4. சிறுகதைப் பிரதியில் மாணவரது பெயர் குறிப்பிடல் தவிர்க்கப்படல் வேண்டும்
5. போட்டிமுடிவு வெளியிடப்படும்வரை சிறுகதைகள் எந்தவொரு ஊடகத்திலும் பிரசுரமாவதைத் தவிர்க்கவும். பிரசுரமான படைப்புக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படும். நடுவர்களது தீர்ப்பே இறுதியானது.

படைப்புக்களை பின்வரும் முகவரிக்கு எதிர்வரும் மே 31-2013 க்கு முன்பு தபாலில் அல்லது எமது மின்னஞ்சல் முகவரிக்கு மின்னணுப் பிரதி செய்து அனுப்பப்படல் வேண்டும்.

admin@muthtamil.com
mtarivalayam@gmail.com
MuthtamilArivalayam
Herslebs gate 43
0578 Oslo,Norway
தொலைபேசி: 0047 934 04 764 / 926 20 542

Exit mobile version