இறந்தவரின் உடலோடு இன்று காலை கரைக்குத் திரும்பிய ஏனைய காயமடைந்த மீனவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான மீனவர் கொலைகளின் பின்னணியில் இலங்கை இந்திய அரசின் நலன்கள் பின்னிப்பிணைந்துள்ளன. இலங்கை அரசோடு இணைந்து தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய இந்தியப் பிராந்திய வல்லரசிற்கு மீனவர்கள் கொலையை நிறுத்த வலுவில்லை என்பது கேலிக்குரியது.தமிழ் நாட்டு மீனவர்களின் இலங்கைக் கரயோரத்தை அண்டிய பிரசன்னம் என்பது இந்திய இலங்கை அரசுகள் தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. இலங்கையில் அழிக்கப்படும் தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து போராட்டங்கள் உருவாவதற்குச் சாத்தியமான சூழல் காணப்படுவதால், தமிழ் நாட்டு மற்றும் ஈழப் பிரதேசங்களுக்கு இடையேயான கடற் பிரதேசங்களில் மனித நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதே இலங்கை இந்திய அரசுகளினதும் அதிகார வர்க்கங்களதும் நோக்கமாக அமைந்திருக்கிறது.
தமிழ் நாட்டின் அதிகாரவர்க்கம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிரான போராட்டங்களை மீனவர்களின் நலன் சார்ந்து முன்னெடுப்பார்கள் என்பது சந்தேகமே .