
அண்மையில் 40 இந்திய மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றது. எல்லை தாண்டி மின்பிடித் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் கைதானார்கள். இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் நவீன மீன்பிடிமுறைகளாலும் எல்லை தாண்டுதலாலும் பாதிக்கப்படுவதாகவும் தமது மீன்வளங்கள் அழிந்து போவதாகவும் குரலெழுப்பி வருகின்றனர். இலங்கை அரச ஆதரவாளர்களோ இதனை ஆதாரமாக முன்வைத்து தமிழ் நாட்டில் எழும் ஈழ ஆதரவுக் உணர்வுகளுக்கு எதிராக செயற்படுகின்றனர். இதனிடையே கைதான நாற்பது மீனவர்களையும் மீள அழைத்துவந்த கரையோரக் காவல்படை தனது கப்பலில் கழிவறைகளையும் கண்ணாடிகளையும் சுத்தம் செய்யுமாறு மீனவர்களைப் பணித்துள்ளது. ஏழை மீனவர்கள் இலங்கைக் கடற்படை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகளிடையே வேறுபாடு இல்லை என உணர்ந்துகொள்ள சிறந்த சந்தர்ப்பம் இது.