Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக் கடற்படையினர் தமிழக் மீனவர்கள் மீது தாக்குதல்

கச்சதீவுக்கு அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை கடந்த வாரம் சென்னை நடைபெற்ற கடற்படை தளபதிகளிம் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல்  வர்மா, நமது கடல் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள ரேடார்களைக் கண்காணிக்கும் போது நமது மீனவர்கள் செல்லக் கூடாத இடங்களுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனர் எனக் கருத்துத் தெரிவித்தார்.
இதே வேளை இலங்கை இந்திய கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version