Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக் கடற்படையினரால் கைதான 139 மீனவர்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம்

sl_navyஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க கோரி காரைக்காலில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 65 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் மேலும் 74 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்துள்ளது. இந்த சம்பவம் மீனவர்களுக்கு இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள 139 பேரையும் விடுவிக்க கோரி காரைக்கால் மீனவர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட நாகை மாவட்ட மீனவர்களில் 34 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் 7ந் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது. மற்ற மீனவர்கள் திரிகோண மலையிலுள்ள இலங்கை கடற்படை முகாமில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரு தினங்களில் இலங்கை கடற்படையின் அடுத்தடுத்த தாக்குதல் மற்றும் சிறைபிடிப்புகளால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை வளங்களை நவீன படகுகள் மூலம் அபகரித்துச் செல்வது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றது என்பது உண்மை. அதே வேளை தமிழக மீனவர்களின் எல்லையை நிர்ணயிப்பதும் அதற்குரிய விதிமுறைகளை உருவாக்கிக்கிக்கொள்வதும் ஒன்றும் கடினமான செயல்பாடல்ல.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிக் கடல்வளங்களை அபகரித்து செல்வதை இந்திய அரசும் இலங்கை அரசும் விரும்புகின்றன.

சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் தமிழக மற்றும் வட கிழக்கு மீனவர்களின் பங்கு 70 களிலிருந்தே காணப்பட்டது. இந்த இரு மீனவ சமூகங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த இலங்கை இந்திய அரசுகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன.

Exit mobile version