இலங்கை கடற்படையினால் தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 3 மீனவர்கள் அதிர்ஸ்ட்டவசமாக உயிர்தப்பியதாகவும், அவர்களின் படகின் கண்ணாடி பலகணிப்பகுதி சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 700 பேருடன் வந்த மீனவக்குழுவுக்கு எதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களின் வலைகளும், படகுகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு எதிராக தமிழக மீனவர்கள் மீண்டும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடும் சாத்தியம் இருப்பதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.