இச் சந்திப்பின் போது இந்திய அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கப்படும் நான்காண்டு தொழில்நுட்பப் பட்டப்படிப்பை இலங்கைக் கடற்படைக்கும் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
முன்னதாக இலங்கையின் கடற்படைக்கு என பிரித்தானிய அரசு ஆயுதங்களை விற்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அவுஸ்திரேலிய அரசு இரண்டு கடற்படைக் கப்பல்களை இலவசமாக வழங்கியிருந்தது.
இலங்கையின் இனப்படுகொலை இயந்திரமான கடற்படையைப் பலப்படுத்தி இந்துசமுத்திரப் பிராந்தியத்தை இராணுவ வலயமாக்குவது ஏகபோக வல்லரசுகளின் நோக்கமான என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பவித் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களைக் கூட ஆயுதபலத்துடன் கொன்றொழிக்கும் இலங்கைக் கடற்படைக்கு இந்திய அரசு பயிற்சி வழங்க முன்வந்தமை குறித்த அதிர்வலைகள் தமிழ் நாட்டில் ஏற்பட ஆரம்பித்துள்ளன.