Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்கெதிராக : இந்தியா அதிருப்தி

இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்திருப்பது இந்தியாவை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக இலங்கை நாளிதழ் தெரிவித்துள்ளது.

 

.
மும்பை தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.  இதனையடுத்து இலங்கை அணிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்து அந்த அணியும் அதனை ஏற்று கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்துக்கு இலங்கை அரசும் அனுமதி அளித்துள்ளது.

 இந்நிலையில் இந்த சுற்றுப்பயணம் இந்தியாவை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக இலங்கை நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
 அரசியல் காரணங்களுக்காக இந்தியா, பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்த நிலையில் இலங்கை அணி அந்நாட்டுக்கு சென்று விளையாட முன்வந்ததை இந்தியா விரும்பவில்லை என்று அந்நாளிதழ் தெரிவித்துள்ளது.
 இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருப்பதாகவும், அந்நாளிதழ்  கூறியுள்ளது.

Exit mobile version