Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்கு வருமாறு ருத்ரகுமாரனுக்கு கருணா அழைப்பு

இலங்கைக்கு வந்து இங்கு நடைபெறும் அபிவிருத்திகளை நேரில் பார்வையிடுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான வி.ருத்ரகுமாரனுக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் முன்னை நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான தளபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

‘எல்.ரி.ரி.ஈ.இற்கு ஆதரவான புலம்பெயர்ந்த மக்கள் எல்.ரி.ரி.ஈ.யினால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். ருத்ரகுமாரன் போன்றோர் நாடுகடந்த அரசாங்கம் எனக்கூறப்படுவதை அமைத்ததுடன் மக்களை திரட்டுகின்றனர். நாம் அவர்களை இங்கு நடைபெறும் அபிவிருத்திகளையும் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையும் நேரில் பார்வையிடுமாறு அழைக்க வேண்டும்’ என பிரதியமைச்சர் முரளிதரன் கூறினார்.

‘புலம்பெயர்ந்த மக்களை நாம் புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் இலங்கையர்கள். புலம்பெயர்ந்த மக்களை புறக்கணித்தால் பிரச்சினை மேலும் நீடிக்கும். நாம் அவர்களுடன் தொடர்புகொண்டு, கலந்துரையாடி, விடயங்களை அவர்களுக்கு விளக்க வேண்டும். இதன்மூலம் தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும்’ என அவர் கூறினார்.

‘இத்தகையதொரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படுவதை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும். நாட்டிற்கு வந்த பலர் என்னிடம் உரையாடும்போது, தமது விஜயத்தின் மூலம் இங்குள்ள உண்மை நிலைவரத்தை கண்டுகொண்டதாக கூறினார்.

அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் மக்கள் தங்கள் நிலங்களையும் உரிமையையும் இழந்துகொண்டிருப்பது குறித்து கருணாவிற்கோ ருத்ரகுமாராரனுக்கோ தெரியாத ஒன்றல்ல. இருவரும் எப்போதுமே ஒரே நேர்கோட்டில் பயணித்தவர்கள்.

Exit mobile version