மகளிர் அபிவிருத்திக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா 40 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலங்கையின் பெண்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்;துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் பல்வேறு குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ச பாசிச அரசுக்கு எதிராக மக்களின் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தவும் அவர்களின் ஒருங்கிணைவைச் சீர்குலைக்கவுமே அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு மில்லியன் கணக்கில் உதவிகளை வழங்கிக்கொண்டு மறுபுறத்தில் தண்டிக்கப்போவதாக நாடகமாடுகிறது. இலங்கை அரச கட்டமைப்பு என்பது பேரினவாதத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜபக்ச அதன் ஒரு பிரதிநிதி மட்டுமே ராஜபக்சவிற்கு எதிரான அழுத்தங்கள் மட்டுமே தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்துவிடும் எனத் தவறான விம்பம் கட்டமைக்கபடுகின்றது. பேரினவாத அரசிற்கு எதிரான மக்களின் போராட்டங்களை ஒழுங்கமைத்தலே இலங்கை அரச கட்டமைப்பை அழிப்பதற்கான ஆரம்பச் செயற்பாடுகளாக அமைய முடியும்.