அவ் அறிக்கை இலங்கையிடம் கையளிக்கப்பட்டதன் பிற்பாடு இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் இரண்டில் அதன் சாராம்சமானது பிரசுரிக்கப்பட்டிருந்தது. இவ்வறிக்கையானது ஐ.நா.சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திலிருந்தே வெளிப்படுத்தப்பட்டிருக்குமென திரு.பாலித கொஹொன தெரிவித்திருந்தார். எனினும் ஒருபோதும் ஐ.நா.சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திலிருந்து அவ் அறிக்கை வெளியாகவில்லையென ஐ.நா.சபையின் பிரதி ஊடகப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை அரசு மூலமாக அவ் அறிக்கையானது ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லையெனவும் அவ் அறிக்கையானது பகிரங்கப்படுத்தப்படுவதானது சம்பூரணமாகத் தவறானதொரு செயல் எனவும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த ஏப்ரல் 21ம் திகதி ஊடகக் கலந்துரையாடலில் இது சம்பந்தமாகத் தெரிவித்திருந்தார்.
ஐ.நா. சபையின் அறிக்கையை பிரசித்தப்படுத்தினால் இலங்கையானது மீளப் புனரமைக்கப்பட முடியாத பாரதூரமானதோர் அழிவுக்குள்ளாகுமென அவ் ஊடகக் கலந்துரையாடலில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.