
இலங்கையில் போருக்கு பின்னர் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மனித உரிமை மீறல்கள் விஷயம் குறித்து முழுமையாக கவனிக்கத் தவறியது என்றும், எனவே ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தையாவது ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் ஆதரிக்க வேண்டும் என்று செனட் கோருகிறது என்று, அங்குள்ள பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரியனன் கொண்டு வந்த ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு பல ஆக்கபூர்வமான பிரேரணைகளை முன்வைத்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை எனவும் ஆஸ்திரேலியா கூறுகிறது.
தமிழ் இனவாத வியாபாரிகளும், பாசிச மகிந்த அரசும் இணைந்து இலங்கையை சர்வதேச வல்லரசுகளின் தெற்காசியநாடுகளுக்கான பலிக் களமாக மாற்றி வருகின்றனர்.