Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்கு எதிராக அமரிக்கா புதிய தீர்மானம் : அழித்தவர்களின் அடுத்த திட்டம்

us-tamilsஅமரிக்கா வன்னிப்படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்டது என்பதும், இலங்கை அரசைத் திருப்திப்படுத்தி தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ள எவ்வாறு நாடகமாடியது என்பதும் போன்ற ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக அமரிக்கா புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரவிருப்பதாக புலம்பெயர் அரசியல் கனவான்கள் கூத்தாட ஆரம்பித்துவிட்டனர். இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனப்படுகொலை எந்தத் தடையுமின்றித் தொடர்கிறது.
உலகம் முழுவதும் மனித நாகரீகம் அவமானமடைகின்ற வகையில் மனிதர்களை கொசுக்கள் போலக் கொன்று குவிக்கும் அமரிக்காவிற்கு தமிழர்கள் மீது அக்கறை முளைத்துவிட்டதாக புலம்பெயர் ஐந்தாம்படை பிரச்சார ஊடகங்கள் மக்களுக்கு மீண்டும் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளன.
ராஜபக்சவிற்குப் பதிலாக இன்னொரு பேரினவாதியை யூ.என்.பி, சரத் பொன்சேகா, முன்னிலை சோசலிசக் கட்சி, ஜே.வி.பி போன்ற இனவாதிகளின் துணையோடு அமரிக்கா ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சிப்பதைத் தவிர வேறு எதையும் செய்துவிடப்போவதில்லை.
‘தேசிய’த்தின் பெயரால் மக்களை சுரண்டிப்பிழைக்கும் புலம்பெயர் குழுக்களே பேரினவாதத்தின் இன்றைய உலகக் காவலர்கள்.

Exit mobile version