ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் உட்பட இராணுவ அதிகாரிகளின் அண்மைக்கால பேச்சுக்கள் இதனை இனம் காட்டுகின்றன.
நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டிலிருந்து புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற விடுதலைப் புலி உறுப்பினர்களும், வெளிநாட்டுச் சக்திகளும் இணைந்து சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கக் கூடிய வகையிலான பல்வேறு திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள், யுத்தக் குற்றங்கள், தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை என பல்வேறு விடயங்கள் குறித்து குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நாட்டிலும் நாட்டுக்கு வெளியேயும் என்ன நடக்கின்றது என்பது குறித்து மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.