Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்கு இந்திய அரசு இராணுவ உதவி வழங்கியது கருணாநிதிக்கு முன்பே தெரியும்:ஜெயலலிதா

02.02.2009.

இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு இராணுவ உதவிகளை வழங்கியது கருணாநிதிக்கு முன்பே தெரியும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த எந்த அமைச்சுகள் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அதைத் தெரிந்துகொண்டு மத்திய அரசை மிரட்டிய கருணாநிதிக்கு தமிழர்களுக்கு எதிரான தீங்குகள் நிகழும்போது அதை தெரிந்துகொள்ளத் தெரியாதா?

ஊடகங்களுக்குத் தெரியும்போது மத்திய அரசை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் கருணாநிதிக்குத் தெரியாதா?

இலங்கைக்கு நவீன ஆயுதங்கள் வழங்குதல், இராணுவப் பயிற்சி எல்லாம் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகத்தான் நிகழ்ந்து வருகின்றன. நான் முதல்வராக இருந்தபோதும் மத்திய அரசில் அங்கம் வகித்தது தி.மு.க.தான். எனவே அப்போது இலங்கைக்கு இந்தியா செய்த உதவிகளுக்கும் கருணாநிதிதான் பொறுப்பு.

Exit mobile version