இந்தநிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இலங்கைக்கு இடையில் சில விடயங்களில் முரண்பாடு காணப்பட்ட போதிலும் இரு தரப்பு உறவுகள் தொடரும் என தெரிவித்துள்ளது.அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான அந்நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றம் மற்றும் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீயா புட்டினாஸ் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு பதவியைப் பொறுப்பேற்ற போது பல்லாயிரக் கணக்கானோர் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை சில ஆயிரமாக குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது தொடர்பிலும் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இன்னும் பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டிய நிலமை காணப்படுவதாகவும், அதற்கான உதவிகளை வழங்கத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அபிவிருத்திப் பணிகளில் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.