Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் அணைக்கட்டு

Basic RGBநாசா வானிலை ஆராய்ச்சி மையம் இலங்கை இந்திய ஆழ்கடல் படம் ஒன்றின் அடிப்ப்டையில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் ஒன்று அமைந்திருந்ததாகவும் அது 17,500,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் முடிபுக்கு வந்துள்ளனர்.
ஆதம் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்பாலம் இயற்கையானதல்ல மனிதர்களால் கட்டப்பட்டது என மேலும் நாசா தெரிவிக்கின்றது.
மனிதவள ஆய்வுகளின் அடிப்ப்டையில் இலங்கையில் முதன்மை மனிதக் குழுவைச் சேர்ந்த முதலாவது மனிதன் 17,500,000 ஆண்டுகளின் அளவில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பாலமும் இதே காலப்பகுதியைச் சேர்ந்ததால் இதற்கு ஆதாம் பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது வழமையான தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் எந்த முக்கியத்துவத்தையும் பெறவில்லையாயினும் இந்திய வரலாற்றுக் கற்பனைக்கதையான இராமாயணம் கூறும் தகவல்களின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகிறது.
திரீத யுகமான 1,700,000 ஆண்டுகளின் முன்னர் நடைபெற்றதாகக் கூறப்படும் இராமாயணத்திலும் இவ்வாறான பாலம் தொடர்பாகக் குறிப்பிடப்படுவது மட்டுமன்றி இப்பாலம் குறித்த இடங்களும் பொருந்துவதால் இக்கற்பனைக் கதையின் பின்னால் எதாயினும் உண்மைச் சம்பவம் ஒன்று அமைந்திருக்கலாம் என மனிதவள ஆய்வாளர் கெல்லார் குறிப்பிடுகிறார்.

Exit mobile version