அவர்களை நடுக்கடலில் வைத்து இந்திய கடலோர காவல் படை கைது செய்து கியூ பிரிவு போலிசாரிடம் ஒப்படைத்தது. 65 பேரையும் கியூ பிரிவு போலீசார் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அழைத்து வந்து ஆண்களை தனியாகவும் பெண்களை தனியாகவும் பிரித்து விசராணை நடத்தி வருக்கின்றனர்
. இதனால் 65 பேரையும் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதையடுத்து 5 இலங்கை தமிழர்கள் நேற்று முன்தினம் காலை சாப்பிட மறுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டபம் அகதிகள் முகாம் தனி ஆட்சியர், ராமேஸ்வரம் டி.எஸ்.பி மணிவண்ணன் ஆகியோர் இலங்கை தமிழர்களிடம் பேசினர். கலெக்டர் மூலம் அரசிடம் எடுத்துக் கூறி சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இலங்கையில் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ள நிலையில் பயண முகவர்களின் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் செய்யும் அகதிகள், மண்டபத்தைப் போன்றே அவுஸ்திரேலிய முகாம்களிலும் அடைத்து வைக்கப்படுகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
அப்பாவி மக்களை இலங்கையிலிருந்து அழைத்து வரும் வியாபாரத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த இந்து-தமிழ் அடிப்படை வாதிகள் பலரும் தொடர்புபட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது.