Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“இலங்கை;அபாயத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் “ஜனநாயகம்”: பி.இராமன்

ராஜபக்ஷ செயற்படும் பாணியானது பொதுமக்கள் மத்தியில் சடுதியான மனமாற்றத்தை தோற்றுவிக்க முடியாது என்று இல்லாதது மாத்திரமல்லாமல், இராணுவம் அரசியல்மயமாக்கப்படுவதற்கான வித்துகளை விதைத்ததாக ஆகிவிடும் என்றும் பாகிஸ்தான்,பங்களாதேஷ் இராணுவங்களின் பாதையில் இராணுவம் செல்வதற்கான வழியையும் உருவாக்கிக் கொடுத்துவிடும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் அமைச்சரவைச் செயலகத்தின் ஓய்வுபெற்ற மேலதிக செயலாளரும் சென்னையிலுள்ள உள்ளூர் கற்கைகளுக்கான நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளருமான பி.இராமன் “அவுட்லுக்” சஞ்சிகையில் “இலங்கை;அபாயத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் “ஜனநாயகம்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலேயே இந்தக் கருத்துகளை முன்வைத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;

26 ஜனவரி 2010 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தனது முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றிகொண்ட பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஷ பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். புதிய பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 08 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலிலும் தனது கட்சியும் தமக்கு ஆதரவளிக்கும் ஏனையவர்களும் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடனும் கணிப்பீட்டுடனும் அவரிருப்பதாகத் தோன்றுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகா தோற்கடிக்கப்பட்ட பின்னர் எதிரணி மட்டத்தில் காணப்படும் குழப்பநிலையிலிருந்தும் அனுகூலத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் பாராளுமன்றத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சமனான வெற்றியைப் பெற முடியுமென்ற எதிர்பார்ப்புடன் ஜனாதிபதி இருப்பதாகத் தோன்றுகிறது.

 அவருடைய எதிர்பார்ப்புகள் யதார்த்தபூர்வமானவையாக அமைந்தால் தமிழ் மக்களின் துயரத்திற்கு தீர்வைக் காண்பதற்கான நிகழ்ச்சித் திட்டத்தையும் பொருளாதார ரீதியில் இலங்கை மீளெழுச்சி பெறுவதற்கான பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதற்கும் அவரால் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடியதாக அமையும்.

தேர்தல்களை உரிய காலத்திற்கு முன்பு நடத்துவதற்கு ராஜபக்ஷ அழைப்பு விடுத்தமை அவருக்குரிய உரிமைகளின் அடிப்படையிலேயே ஆகும். அவருடைய செயற்பாடுகள் தொடர்பாக எவரும் ஆட்சேபித்திருக்கவில்லை. ஆயினும் ஜெனரல் பொன்சேகா மற்றும் அவரின் ஆதரவாளர்களை தொந்தரவுபடுத்தும் விதம் தொடர்பாகவே ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படுகின்றன. தேர்தலில் பொன்சேகா பெற்ற வாக்குகள் ராஜபக்ஷவின் கட்சி மற்றும் அக்கட்சியின் தேர்தல் நேச அணிகள் பெற்ற வாக்குகளுக்கு எதிரானவையென்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற வகையிலேயே நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தென்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொன்சேகாவுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் எதிரான அச்சுறுத்தல் பிரசாரம் ஆரம்பமானது. 3 மேஜர் ஜெனரல்கள் உட்பட 12 இற்கு மேற்பட்ட படையதிகாரிகள் பதவி நீக்கப்பட்டுள்ளனர். விசேடமான காரணங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. பொன்சேகாவிற்கு விசுவாசமானவர்கள் என்ற சந்தேகத்தில் அவர்கள் விலத்தப்பட்டதாகத் தென்படுகிறது.

படையிலுள்ள பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து கௌரவமற்றதன்மையிலேயே பொன்சேகா கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியாகவிருந்து விடுதலைப்புலிகளை அழிப்பதற்குரிய தலைமைத்துவத் தன்மையை பாராட்டும் விதத்தில் வெளிப்படுத்தியவர் என்ற உண்மைக்கப்பால் பொன்சேகா கௌரவமற்ற விதத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் மயிரிழையில் பொன்சேகா ஒரு தடவை உயிர்தப்பியிருந்தார். இந்த விடயமானது அவரை அழிப்பது தனது நோக்கத்தை வென்றெடுப்பதற்கு எவ்வளவு தூரம் என்பதென புலிகளால் கருதப்பட்டிருந்ததை வெளிப்படுத்துகின்றது.

ஜனாதிபதி மற்றும் அவரின் இரு சகோதரர்கள் உட்பட பலர் விடுதலைப்புலிகளின் அழிவிற்கு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். பொன்சேகாவின் பங்களிப்பும் புலிகளால் கிட்டத்தட்ட அவர் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட பின் மீண்டும் அவர் ஆற்றிய பங்களிப்பும் படையினர் மத்தியில் புலிகளுக்கெதிராகத் தீர்க்கமான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான எண்ணப்பாட்டைத் தோற்றுவித்திருந்தது. புலிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முகம்கொடுக்கும்

தனது நீண்ட வரலாற்றில் இலங்கையில் இராணுவமானது கதாநாயகர்கள் பலரை உருவாக்கியிருக்கவில்லை. தங்களின்ஆகர்ச சக்தியாக படைவீரர்களால் கருதப்படும் கதாநாயகர்கள் பலரை இலங்கை இராணுவத்தின் நீண்ட வரலாறு கொண்டிருக்கவில்லை. ஆனால், படைவீரன் என்ற அடிப்படையில் பொன்சேகா அசாதாரணமானவராக இருந்தார். புலிகள் வெற்றிகொண்ட பின்னர் அரசியல் அபிலாசையினால் அவரின் கண்கள் மூடப்பட்டதாகத் தென்படுகிறது. வெற்றியில் ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் மற்றும் ஏனையவர்களும் ஆற்றிய பங்களிப்பை அவர் தாழ்வுபடுத்துவதாக பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டதாகத் தென்படுகிறது.

தன்னைப் பற்றிய அபரிதமான பெருமையும் அவருடைய வகிபாகமும் தம்மைச் சுற்றியிருப்போரிடமிருந்து பெற்றுக்கொண்ட கெடுதியான ஆலோசனையும் கண்ணியம்,விசுவாசம் என்ற எல்லைகளை அவர் தாண்டிச் செல்வதற்குரிய வகையில் அவரை உருவாக்கியது.ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது அவர் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார்.

ஜெனரலுக்கு எதிராக ஆத்திரமடைவதற்குரிய வலுவான காரணங்களை ராஜபக்ஷ கொண்டுள்ளார். ஆனால், அந்த ஆத்திரமானது தமக்கு சிறப்பான இடத்தைப் பெறுவதற்கு அவர் இடமளித்துள்ளார். தேர்தலுக்குப் பின்னர் ஜெனரலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஜெனரல் கைதுசெய்யப்பட்ட சூழ்நிலைகள் என்பன சாதாரண சட்டங்களின் கீழ் இடம்பெற்றிருக்கவில்லை. ஆயுதப்படைகளால் நிர்வகிக்கப்படும் விசேட சட்டத்தின் கீழேயே கைது இடம்பெற்றுள்ளது. இராணுவ நீதிமன்றத்தில் அவரை விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜெனரல் பதவியிலிருந்த காலத்தில் தேசிய பாதுகாப்பை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகளின்பேரில் அவர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார். ஜனாதிபதியை விமர்சிக்கத் துணிந்ததற்கு எதிராக மேற்கொள்ளப்படும் கசப்பான நடவடிக்கையென்ற சந்தேகங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷவைத் தோற்கடிக்க எதிரணி மேற்கொண்ட முயற்சிக்கு தம்மைப் பயன்படுத்த ஜெனரல் பொன்சேகா இடமளித்ததற்கெதிரான முயற்சியாகவும் கருதப்படுகிறது.

பொன்சேகாவை தடுத்துவைத்து அவருக்கெதிராக அரசாங்கத்தினால் வழக்குகளை ஆரம்பிப்பதானது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொன்சேகா செல்வாக்குச் செலுத்துவதைக் கடினமானதாக்குவதாக அமையும் என்றும் அந்த முயற்சியில் ராஜபக்ஷவும் சகோதரர்களும் ஈடுபட்டிருக்கலாம் என்றும் உள்வாங்கிக்கொள்ள முடியும். தாம் செயற்படும் விதம் தொடர்பான விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என்பது மட்டுமல்லாமல், இலங்கை இராணுவத்தை அரசியல்மயப்படுத்துவதற்கான விதைகளை விதைத்ததாகவும் ஆகிவிடும் என்பதையும் பாகிஸ்தான்,பங்களாதேஷ் இராணுவங்களின் பாதையில் இலங்கை இராணுவம் செல்வதற்கு வழியமைத்துக் கொடுப்பதாகிவிடும் என்பதையும் ராஜபக்ஷ புரிந்துகொண்டதாகத் தோன்றவில்லை.

தமது ஆயுதப்படைகளை அரசியல் மயப்படுத்தியதற்கான பொறுப்பில் அவர்களிருக்கும் பங்கிலிருந்தும் பாகிஸ்தான்,பங்களாதேஷ் அரசியல் தலைவர்கள் தப்பிச்சென்றுவிட முடியாது. தமது நாடுகளில் அரசியல் வாழ்வில் இராணுவம் மேலாதிக்கம் செலுத்த வசதிகளைச் செய்து அவர்கள் கொடுத்திருந்தனர். இந்த நடவடிக்கைகளை அவர்களின் இராணுவம் பயன்படுத்திக் கொண்டது.

இலங்கையில் இதுவரை காலமும் ஜனநாயகம் உயிர்வாழ்ந்து கொண்டும் செழிப்படைந்தும் இருக்கின்றதென்றால் அதற்கு ராஜபக்ஷவிற்கு முன்னர் பதவியிலிருந்தவர்கள் வெளிப்படுத்திய  அறிவு ஞானமே முக்கியமான பங்களிப்பை வழங்கியிருக்கிறதென்று கூற முடியும். இராணுவத்தை தொழிற்சார்மயப்படுத்தியதாகவும் அரசியலில் நடுநிலைமையானதாகவும் இருக்க அவர்கள் பங்களிப்பை நல்கியிருந்தனர். தமக்கு முன்னர் பதவியிலிருந்தவர்கள் பின்பற்றிய அறிவு ஞானப் பாதையிலிருந்தும் விலகிச்சென்றும் தாம் செயற்படும் விதத்தில் செயற்பட்டுக்கொண்டும் இருப்பதன் மூலம் ராஜபக்ஷ சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை வென்றெடுத்திருந்த மரியாதைக்குரிய ஆரோக்கியமான பாரம்பரியங்களை ஏற்கனவே உடைத்துவிட்டுள்ளார். ராஜபக்ஷ இந்த மாதிரியான பழிவாங்கும் தன்மையான நடவடிக்கைகளைத் தவிர்த்து அவற்றிலிருந்தும் பின்வாங்கிக் கொள்ளாதுவிடின், பாகிஸ்தான்,பங்களாதேஷின் விதியை இலங்கை சந்திப்பதற்கான ஆபத்து காணப்படுகிறது.

Exit mobile version