விக்கிலீக்ஸ் போன்ற நம்பகமான மூலங்கள் ஊடக பிள்ளையான் டக்ளஸ் குழுக்களின் மனித உரிமை மீறல்கள், கொள்ளை, சூறையாடல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. இக் குழுக்களின் ஊறுப்பினர்களால் ஒழுங்குபடுத்தப்பட நிகழ்வில் திரு.மௌனகுரு போன்றவர்களின் நாட்டுக்கூத்து போன்றனவும் நடைபெற்றன.
அடிப்படை மனித உரிமையைக் கூட மதிக்காத மக்கள் விரோதக் குழுக்களுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதைக் கூட அவமானமாகக் கருதாத கோரமான சமூக உளவியலை போர் ஏற்படுத்தியிருப்பதற்கான குறியீடுகளே இவை.
அறிவுசீவிகள் என சமூகத்தின் முன்னோடிகளாகத் தம்மை முன்னிறுத்தும் மௌனகுரு உட்பட சிலரின் மனிதகுல விரோதச் செயற்பாடுகள் எதிர்கால சந்ததியின் சமூக உளவியில் மீத ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒரு பகுதி புலம்பெயர் சமூகம் புலி சார் பிழைப்புவாதிகளோடும் மறு பகுதி புலியெதிர்ப்பு அரச பாசிஸ்டுக்களோடும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள, சுயலாபத்திற்காக அவற்றின் உள்ளூர் முகவர்கள் இரண்டு முகாம்களிடையேயும் பிளவடைந்துள்ளனர்.
அரச ஆதரவு புலம்பெயர் குழுக்கள் சாதிய முரண்பாடு, பிரதேச முரண்பாடு போன்றவற்றை தமது அரசியலுக்குச் சார்பாகக் கையாள்வதன் ஊடாக தமது ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.
இந்த முரண்பாடுகளை ஆழப்படுத்துவதன் ஊடாக தமக்கான அரசியல் வெளியை உருவாக்கும் இக் குழுக்கள் கலை இலக்கியம் போன்ற சமூகத்தின் மேல் தெரியும் பகுதிகளைக் கையகப்படுத்துகின்றனர்.
பீபீசீ தமிழோசை போன்ற சர்வதேச தமிழ் ஊடகங்களும் நேரடியாக இக் குழுக்களுகு ஆதரவாகச் செயற்படுகின்றன.
புலம்பெயர் தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகளுடன் நேரடியாக முரண்பட்டுக்கொள்ளாமையால் இவர்களுக்கு எதிரணி என்பது கிடையாது. முரண்கள் அற்ற இந்த இடைவெளியைப் பயன்படுத்தும் இக் குழுக்களின் உலகளாவிய வலையமைப்பு பலம்வாய்ந்தாக இல்லையெனினும் முற்போக்கு ஜனநாயக அரசியலின் உருவாக்கத்திற்குத் தடையை ஏற்படுத்தும் பிரதான பாத்திரத்தை இவர்கள் வகிக்கின்றனர்.