முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நேரடியாக அரசியலில் ஈடுபட்டமை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் தெரிவித்தார்.
கோட்டாபய இலங்கையை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகக் கருதப்படுகின்றது. உலகின் பல நாடுகளில் கோட்டாபயவின் தனியார் இராணுவச் சேவையான அவன்கார்ட் மரிடைம் இயங்கிவருகிறது. அதன் அலுவலகத்தின் பிதான நிலைகளில் ஒன்றான சிஷெல் தீவை நோக்கி கோட்டாபய சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
ராஜித சேனரட்ன இலங்கையில் ஆட்சி மாற்றத்தில் பிரதான பங்குவகித்தவர். ராஜபக்ச அரசாங்கத்தில் இனப்படுகொலையின் பின்னர் இலங்கை அரசு சார்பாக மேற்கில் பிரச்சாரம் மேற்கொள்ள நியமிக்கப்பட்டவர். பிரித்தானியாவில் ராஜபக்சவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நிறுவனமான பெல் பொட்டிங்டரை கையாண்டவர் ராஜித சேனரட்னவே.
இறுதியில் ராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை முறியடிக்க அமெரிக்காவின் தலையீம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஆசியா பிவோட் திட்டத்தில் இலங்கை பிரதான இடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
http://avantmaritime.com/contact-us