பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பிரித்தானிய அரசு இலங்கை அரசிற்கு இறுத்தியுத்தம் என்றழைக்கப்படும் இனப்படுகொலையின் உச்சகாலத்தில் ஒத்துழைப்புக்களை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியுத்தக் காலத்தில் பிரித்தானியாவில் ஆட்சியிலிருந்த கட்சியுடனும் எதிர்க்கட்சியுடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணிக்கொண்ட புலிசார் அமைப்புக்கள் அவர்களுடன் இணைந்தே ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
பிரித்தானியப் பிரதமர் யுத்தத்தை நிறுத்தக் கோரி மகிந்த ராஜபக்சவிற்குக் கடித்தங்கள் அனுப்பினார்.
மகிந்த ஆட்சி பிரித்த்தானியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. சிங்கள மக்கள் மத்தியில் பிரித்தானியா தன்னை தூக்கிலிடப்போவதாக பிரச்சாரம் செய்து அனுதாபத்தை வாங்க்கிக் கொண்டது.
புலம் பெயர் ஊடங்கள் பிரித்தானிய இலங்கை அரசிற்கு எதிராகச் செயற்படுவதாக மக்களுக்கு நம்பிக்கை வழங்கின.
இவை அனைத்தும் ஏகாதிபத்திய அரசுகளின் திட்டமிட்ட சதி என்று ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்துப் போராடக்கோரியவர்களின் குரல்வழை நசுக்கப்பட்டது.
இவ்வாறு மிகப்பெரிய கொலை நாடகமே நடத்தப்பட்டது.
இன்றும் பிழைப்புவாதிகளின் நாடகம் தொடர்கிறது.