Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவ மயமாக்கலை அபிவிருத்தி என அழைக்கும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள்

இலங்கை இனப்படுகொலை அரசின் கொலைக்குற்றவாளிகளில் ஒருவரும் இலங்கை அரசின் இன்றைய ஊதுகுழலுமான ருவான் வணிகசூரிய அச்சுவேலை மக்கள் குடியிருப்புக்கள் மத்தியில் அழுக்குப் போன்று காணப்படும் இராணுவ முகாமை முட முடியாது என அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பு மீண்டும் உயிர் பெறுவதை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு அச்சுவேலி இராணுவ முகாம் மிகவும் முக்கியமென கருதப்படுவதனால் எக்காரணம் கொண்டும் அந்த முகாம் அகற்றப்பட மாட்டாதென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்க்கிறது என இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்திய நாடகத்தின் பின்னர் தாம் வடக்கையும் கிழக்கையும் இராணுவமயமாக்கும் செயற்பாடுகளை இலங்கை அரச நியாயப்படுத்தி வருகின்ற து.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:-

குறித்த முகாம் 1995 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது இந்த முகாமில் 09 குடும்பங்களுக்குரிய காணிகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவர்களுக்குரிய நஷ்ட ஈட்டுத்தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரச சேவைகளுக்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் சட்டம் 1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் பிரகாரமே வடக்கில் இராணுவ முகாம்களுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.

இவ்வாறான காணி சுவீகரிப்பு இல்லையென்றால் நாட்டில் இன்றைய அதிவேகப் பாதைகள் இருக்காது. அபிவிருத்தி பணிகள் நடைபெற்றிருக்க முடியாது.’ என்றார்
இலங்கை முழுவதையும் வறுமைக்கோட்டுக்குள் அமிழ்த்திவிட்டு வடக்கிலும் கிழக்கிலும் இனச்சுத்திகரிப்பைக் கட்டவிழ்த்துவிட்டு அபிவிருத்தி என்று நாடகமாடும் இக்கொலைகாரக் கும்பல்கள் முழு நாட்டையும் சூறையாடிவருகின்றன. ஒரு பிரதேசத்தின் பகுதி மக்களை அழித்துத் துடைத்துவிட்டு மறுபகுதியை இராணுவமயமாக்கி ஒடுக்கும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் இவற்றிற்கு அபிவிருத்தி எனப் பெயரிட்டுள்ளனர்.

Exit mobile version