சரத் பொன்சேக்கா கூட்டுப் படைத் தலைமை அதிகாரி பதவியிலிருந்தும், இராணுவ சேவையிலிருந்தும் ஓய்வுபெற அனுமதிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் இராணுவ சதிப் புரட்சி குறித்து அரசாங்கம் சந்தேகித்ததாகக் கூறியிருந்தார்.
யுத்த வெற்றியைப் பெற்ற இராணுவத்தினரை சூழ்ச்சியாளர்கள் என சந்தேகித்ததாகவும், இராணுவ சதிப் புரட்சியொன்று ஏற்படும் என்ற அச்சத்தில் இந்திய இராணுவத்தின் உதவியைக் கோரியதாகவும், தான் ஓய்வுபெறுவதற்கு அழுத்தங்களை ஏற்படுத்திய காரணங்களைக் குறிப்பிட்டு சரத் பொன்சேக்கா அனுப்பியிருந்த கடிதத்தில் வலியுறுத்தி கூறியிருந்தார்.
தேசத்திற்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இராணுவம், அதிகாரத்தைப் பெறுவதற்காக சூழ்ச்சி செய்கிறது என்ற சந்தேகத்தில் கடந்த ஒக்டோபர் 15ம் திகதி இந்திய அரசாங்கத்தின் உதவியைக் கோரியமை, இதனையடுத்து இந்திய இராணுவம் உசார் நிலையில் வைக்கப்பட்டமையானது தனக்கு பாரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக சரத் பொன்சேக்கா கூறியிருந்தார்.