Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவ சதிப்புரட்சி மாயையை ஏற்படுத்தி ராஜபக்ச குடும்பத்தினரின் பாதுகாப்பை அதிகரிக்க கோதாபய திட்டம்!

  இராணுவ சதிப்புரட்சியொன்று தொடர்பாக பீதியை ஏற்படுத்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச  தனது குடும்பத்தினரின் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், அரச புலனாய்வுத்துறையை முழுமையாக மறுசீரமைக்கவும் கொழும்பு இராணுவ நடவடிக்கை தலைமையகத்தின் பிரதானியாக கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மகிந்த விஜேசூரியவை நியமிக்கவும் கோதாபய தீர்மானித்துள்ளார்.

அத்துடன் கஜபா படைப்பிரின் மூன்று படையணிகளை கொழும்பு நகரில் நிலைக்கொள்ள செய்யவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திட்டமிட்டுள்ளார். ஒரு படைப்பிரிவின்  மூன்று அணிகள் கொழும்பு நகருக்கு அழைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். கஜபா படைப்பிரிவு கோதாபயவுக்கு மிகவும் நம்பகமான படைப்பிரிவாக கருதப்படுகிறது.

கோதாபய, கஜபா படைப்பிரிவில் கேர்ணலாக பணியாற்றியதுடன் அதிலிருந்து விலகிய நிலையில் அமெரிக்காவுக்கு சென்றார். இந்த நிலையில், விடுதலைப் புலிகளை யுத்த ரீதியில் தோற்கடித்த பின்னர், எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களால், நாட்டில் ஏற்பட்டுவரும் நிலைமைகளை கண்காணிக்கும் வகையில் அரச புலனாய்வுப் பிரிவினை மறுசீரமைக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தீர்மானித்துள்ளார்.

இதனடிப்படையில் அரசப் புலனாய்வுப் பிரிவின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Exit mobile version