Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவமயமாகும் இலங்கை:போர்க்குற்ற விசாரணையின் மறுபக்கம்

militarisationஎதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இராணுவம் முகாம்கள் உருவாக்கப்படலாம் என இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதிலும் மாவட்ட மட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

சிறீ லங்கா தெற்காசியாவில் அதக வளங்களைக் கொண்டு வேகமாக விரிவடையும் இராணுவத்தைக் கொண்டுள்ளது எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. உலக இராணுவமாக்கல் சுட்டி Global Militarization Index என்ற அளவிட்டு முறையின் அடிப்படையில் இத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு முன்னணியில் திகழும் இலங்கை 36 ஆவது காணப்படுகிறது. பாகிஸ்தான் 47 ஆவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 58 ஆவது இடத்திலும் பின் தள்ளப்பட்டுள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) ஒப்பிட்டு இராணுவச் செலவைக் கணிப்பிடும் இந்த விகிதாசார அளவீட்டு முறையில் இலங்கை இராணுவமயமாவதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு முன்னணியில் திகழ்கிறது.

போரின்றிச் சமாதானம் நிலவுவதாகக் கூறப்படும் இலங்கை என்ற நாட்டில் வரலாற்றில் அதியுயர் இராணுவச் செலவு இறுதியாக நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. 1,95 பில்லியன் டொலர்கள் இராணுவத்தில் முதலிடப்பட்டுள்ளது.

பிரிதானிய அரசு 8 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியுள்ள 48 அனுமதிப் பத்திரங்களை இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதற்காக வழங்கியுள்ளது.

ஒரு புறத்தில் நாட்டைப் பாதுக்காக்கிறோம் என்ற பெயரில் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழிக்கும் மகிந்த அதிகாரம், மறுபுறத்தில் அமரிக்கா, பிரித்தானியா,சீனா,இந்தியா உட்பட பல நாடுகளுடன் இராணுவ வியாபார ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது.

இராணுவ மயமாக்கல் இப்போது தமிழ்ப் பகுதிகளில் மட்டுமல்லாது சிங்களப் பகுதிகளையும் நோக்கி விரிவடைந்துள்ளது. சிங்களப் பகுதிகளில் ஏற்பட்டுவரும் அரச எதிர்ப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஆயுதம் தாங்கிய யுத்தமாக உருவெடுக்கக்கூடிய நிலை தோன்றும் என இலங்கை அரசு அஞ்சுகிறது.

பல்தேசிய நிறுவனங்களின் துணையோடு ராஜபக்ச அரசு மேற்கொள்ளும் பொருளாதாரக் கொள்ளையால் சிங்கள மக்கள் மத்தியில் என்றுமில்லாதவாறு தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. வறுமையின் பிடியில் பல கிராமங்களில் மக்கள் அழிந்துபோகிறார்கள்.

இவற்றிற்கு எதிரான நிலைமை எதிர்கொண்டு பல்தேசிய வியாபார நிறுவனங்களில் கொள்ளையைத் தீவிரப்படுத்தவே இராணுவ மயமாக்கல் உலக நாடுகளின் துணையோடு நடைபெறுகிறது. போர்க்குற்ற விசாரணை நடத்தப்போவதாக நாடகமாடும் இடைவெளிக்குள் இலங்கையை இராணுவமயமாக்குவதில் ஏகாதிபத்தியங்களும் இலங்கை அரசும்  தீவிரமாகச் செயற்படும். போர்க்குற விசாரணையில் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு இராணுவ மயமாக்கலும் இனச்சுத்திகரிப்பையும் மிக லாவகமாக நடத்துவதே இலங்கை அரசினதும் அதன் எஜமானர்களான ஏகாதிபத்தியங்களதும் நோக்கம்.

Exit mobile version