இலங்கை இனக்கொலை அரசும் அதன் பரிவரங்களும் நாட்டை இராணுவமயப்படுத்தும் திட்டத்தை அனைத்து முனைகளிலிருந்து நடத்திக்கொண்டிருகின்றன. மக்கள் மத்தியில் இராணுவக் கோரச் சிந்தனையை விதைக்கும் தலைமைத்துவப் பயிற்சி என்ற திட்டத்தை ராஜபக்ச அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக பயிற்சியில் இணைத்துக்கொள்ளும் அரசிற்கு எதிரான போராட்டங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. இன்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்க்கையில் மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு பயிற்சி வழங்கப்படுவதாகவும் மாணவரகள் அதனை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
பல்கலைக் கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி கடந்த 7ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மிரட்டப்பட்டு சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இந்த நிலையில் இப் பயிற்சி இலங்கை அரசின் திட்டமிட்ட அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுவதாக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.