பெற்ற படையினரை கௌரவிக்கும் வகையில் இன்று கொழும்பில் நடைபெற்ற பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் சென்றவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் படையினரை பாராட்டும் வகையிலும் கோஷங்களை எழுப்பினர். யுத்த வெற்றியினை குறிக்கும் வகையில் ஜனாதிபதியின் உருவப்படங்களை தாங்கிய வாகன ஊர்திகளும் பேரணியில் இடம்பெற்றது.
பேரணியில் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற வேடமணிந்த ஒருவருக்கு அருகில் வந்தோர் தாக்குதல் நடத்துவது போன்று சித்திரிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன், பிரபாகரனின் மரணத்தை குறிக்கும் வகையில் சுவரொட்டிகளை தாங்கிய சுலோகங்களும் பேரணியில் காணப்பட்டது.
பேரணியின் ஆரம்பத்தில் பாடசாலை மாணவர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு முன்சென்றனர். அதனையடுத்து, கண்டிய நடனக் குழுவினர் அணிவகுத்து வந்தனர். இதனையடுத்து தேசிய கொடிகளை ஏந்தியவாறு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பேரணியாக வந்தனர்.
பிற்பகல் 1 மணியளவில் கம்பல் மைதானத்தில் ஆரம்பித்த பேரணி மாலை 6 மணியளவிலேயே பாராளுமன்ற மைதானத்தை வந்தடைந்தது. பல மைல் நீளத்திற்கு இந்த பேரணி காணப்பட்டது. பேரணியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என பெருமளவானோரும் கலந்து கொண்டனர்.
புலிகளிடமிருந்து நாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்ட முப்படைகளுக்கும், பொலிஸ், ஊர்காவற்படை வீரர்கள், மற்றும் சிவில் அமைப்புகளுக்கும் மகிழ்ச்சியுடன் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த படை வீரர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றத் திடலில் நடைபெறுகிறது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னொரு பொழுதில் பல நூற்றுக் கணக்கான படைகளைக் கொல்வதில் முக்கிய பாத்திரம் வகித்த கருணா, தனது உரையச் சிங்களத்தில் ஆரம்பித்தார்.
இதில் கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தாவும் சிங்களத்திலேயே தனது உரையை ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.