Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவத்தினர் ஒருபோதும் சரணடைய வந்தவர்களைச் சுடவில்லை : இமெல்டா சுகுமார

இராணுவத்தினர் ஒரு போதும் சரணைடய வந்வத மக்களைச் சுடவில்லை, இராணுவத்தினர் மக்களை சரணடையுமாறே கோரினார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளே தமது அனுமதியின்றி மரச படையினரிடம் சரணடையச் சென்ற பொதுமக்களை சுட்டுக் கொன்றனர் என யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஆணைக்குழு அமர்வுகளில் இவ்வாறு அவர் சாடசியமளித்துள்ளார்.

யாழ்.மாவட்ட அரச அதிபர் தனது சாட்சியத்தில், யுத்தத்தின் போது மன்னார், கிளிநொச்சி பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கே வந்து சேர்ந்தனர். அதனால் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியிலேயே நிர்வாகத்தை மேற்கொண்டேன் எனவும், அரசாங்கம் மாத்திரமே உதவி செய்தது, அப்போது எந்தவொரு சர்வதேச தொண்டர் நிறுவனங்களும் முல்லைத்தீவில் இயங்கவில்லை. ஆனால் ஐ.சி.ஆர்.சி மாத்திரம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட பொருட்களில் 80 சதவீதம் மகக்ளைச் சென்றடைந்தன, ஏனைய 20 சதவீதம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது எனவும், யுத்தத்தின் போது இராணுவத்தினர் மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார்கள் எனவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் சாடசியத்தில் தெரிவித்திருக்கிறார்.

யாழ்.மாவட்ட அரச அதிபர் கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம சென்றிருந்த பிரித்தானிய பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு உயர் பாதுகாப்பு வலயமும் கிடையாது. கண்ணி வெடி அபாயமுள்ள பகுதிகள் தான் இருக்கின்றன எனத் தெரிவித்திருந்தமையையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தேவநாயகனும் தமது மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் கடந்த வாரம் ஜேர்மன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் அபிவிருத்திப் பணிகள் குறித்து அறிந்து கொள்வதற்கான மூன்று நாள் விஜயம் ஒனிறினை மேற்கொண்டிருந்த வேளையில் யாழ்.மாவட்ட அரச அதிபருடன் சந்திப்பை மேற்கொள்ள வில்லை. அதே வேளை இக்குழு யாழ்.மாநகர சபைக்கு விஜயம் செய்து கலந்துரையாடலை மேற்கொண்ட போது மேயரோ அல்லது துணை மேயரோ அதில் கலந்து கொள்ளவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

ஜேர்மன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஜேர்மன் நாட்டில் வரி செலுத்துபவர்களின் பணமே இலங்கைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டதாகவும், தாம் எதிர்பார்த்த அளவிற்கு பிரயோசனமான அபிவிருத்திப் பணிகள் எதுவும் குடாநாட்டில் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் தெரிவித்திருகக்pறார்கள்.

Exit mobile version