Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவச் செலவீனங்கள் எல்லாம் முதலீடுகள் : பசில் ராஜபக்ச

இலங்கையில் இராணுவச் செலவீனங்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு மில்லியன் டொலர்களை வருடாவருடம் வருமானத்தை வழங்கும் மூலமாக உள்ளது. கோதாபய ராஜபக்சவின் லங்கால் லொஜிஸ்டிக் என்ற நிறுவனமே இலங்கைக்கு பாரிய ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் பிரதான நிறுவனம். இந்த நிலையில் ராஜபக்ச குடும்பத்தின் இன்னொரு பிரதானியான பசில் ராஜபக்ச இராணுவச் செலவீனங்கள் முதலீடுகளாகும் எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்காக செலவிடப்படும் அனைத்தையும் முதலீடுகளாக கருதுவதாகவும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்களே பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைக்குமாறு கூறுவார்கள் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடு, மக்கள், சொத்துக்களின் பாதுகாப்பு மாத்திரமல்லாது, சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு காரணமாக, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version