Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவச் சதிப்புரட்சி ? : இலங்கை அரசு அச்சம்!

sarath“பாகிஸ்தானைப் பாருங்கள், சுல்பிகார் அலி பூட்டோவிடமிருந்து இராணுவச் சதிப்புரட்சி ஊடாக ஷிய உல் ஹக் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாளிலிருந்து இன்றுவரை நாட்டின் பொருளாதாரம் சீர்குலந்துள்ளது, மக்களுடைய வாழ்க்கை நிலையற்றதாக உள்ளது. இப்போது கூட எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற பய உணர்வோடுதான் மக்கள் வாழ்கிறார்கள். இந்த நிலைமை இலங்கைக்கு வேண்டாம். என்று மகாவலி மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் இலங்கை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த குறிப்பிட்டார்.
தவிர இலங்கை அரசுசார் ஊடகங்கள் இராணுவச் சதிக்கு எதிரான கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. இவ்வாறான இராணுவச் சதி ஒன்றை இலங்கை அரசு எதிர்பார்ப்பதாக உடகவியலாளர் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
புலிகளுடனான போரில் வெற்றிகண்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேக அரசிற்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவிக்கும் அதே வேளை வன்னிப் போர்க்களத்தில் நேரடியாக ஈடுபட்ட உயர் இரணுவ அதிகாரிகளுக்கு நிர்வாகம் சார்ந்த பதவிகளை அவசர அவசரமாக இலங்கை அரசு வழங்கி வருகிறது.

இராணுவத்தின் கீழ் மட்டம் வரை சரத் பொன்சேகவின் செல்வாக்குத் தளம் விரிந்திருப்பதால், இராணுவச் சதிக்கான சாத்தியங்கள் அதிகரித்திருப்பதாக இலங்கை அரசு அஞ்சுகிறது. இதன் எதிரொலியாகப் பல புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version