03.12.2008.
இராக் மீதான போரை தவறாகக் கையாண்டதும், இராக் குறித்து உளவுத் துறை அளித்த தவறான தகவலின் அடிப்படையில் போர் தொடுத்ததும்தான் தமது ஆட்சிக்காலத்தில் நடந்த மிகப்பெரிய தவறு என்று பதவி விலக உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி யளித்த அவர், இராக் போர், தான் எதிர்பாராத ஒன்று என்றும், உளவுத்துறை அளித்த தவறான தகவலின் அடிப்படையில்தான் போர் தொடுக்க வேண்டிய தாயிற்று என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், இராக்கிலிருந்து இப்போ தைக்கு படைகளை விலக் கிக் கொள்ளக்கூடாது என் றும் அவர் கூறியுள்ளார்.
இராக் குறித்து உளவுத் துறை அளித்த தவறான தக வல்களை நான் மட்டும் நம்பவில்லை. நாடாளு மன்ற உறுப்பினர்கள் பல ரும் கூட நம்பி விட்டனர் என்று கூறிய புஷ், இராக் போரினால் அமெரிக்கர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அதிகாரப்பூர்வ கணக்குப் படி அமெரிக்கப்படை யைச் சேர்ந்த 4,200 பேர் இறந்துள்ளனர் என்று அவர் கூறினார்.