Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராக் போரை நியாயப்படுத்தும் டோனி பிளேரின் வாதங்களில் உண்மையில்லை! :ஹன்ஸ் பிளிக்ஸ்

blairdailyshow203bஇராக் மீதான படையெடுப்பை நியாயப்படுத்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் தற்போது முன்வைக்கும் புதிய வாதங்களில் உண்மையின் வலிமை இல்லை என இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளனவா என்பதைத் தேடிவந்த ஐ.நா. ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹன்ஸ் பிளிக்ஸ் கூறியுள்ளார்.

நாளை ஞாயிறன்று ஒளிபரப்பப்படவுள்ள ஒரு பிபிசி பேட்டிக்காக பேசிய பிளேர், மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு இராக் ஒரு அச்சுறுத்தலாக இருந்துவந்தது என்றும், இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று தனக்கு முன்கூட்டியே தெரியவந்திருந்தாலும்கூட பிரிட்டன் அந்நாட்டின் மீது படையெடுப்பதற்கான உத்தரவை தான் வழங்கியிருக்கவே செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

இராக் பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ளது என்ற வாதத்தின் அடிப்படையில்தான் அதன் மீது படையெடுப்பு செய்வதை அத்தருணத்தில் பிளேர் நியாயப்படுத்திவந்தார் என்றும், அதுவன்றி யுத்தத்துக்கு பிற நியயமான காரணங்களும் இருக்கவே செய்வதாக பிளேர் இப்போது கூறுவது அவர் மீதான நம்பகத்தன்மைக்கு ஏற்றதாக இல்லை என்றும் ஹன்ஸ் பிளிக்ஸ் கூறியுள்ளார்.
BBC.

Exit mobile version