Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராக் – சீனா எண்ணெய் ஒப்பந்தம் நிறைவேறியது ;! 300 கோடி டாலர்கள் மதிப்பு!

30.08.2008.
சீனாவும் இராக்கும் சுமார் 300 கோடி டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தம் ஒன் றில் கையொப்பமிட் டுள்ளன.

2003-க்குப் பின் அதா வது இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பின், இராக் அன்னிய நாடு ஒன்றுடன் செய்து கொள்ளும் இந்த ஒப்பந்தம் பெய்ஜிங்கில் வியாழனன்று கையொப்ப மானது.

இந்த ஒப்பந்தத்தை இராக் அமைச்சரவை ஏற்க வேண்டும். சீன தேசிய பெட்ரோலியக் கழகத் துடன் இராக் அரசு ஒப் பந்தம் செய்துள்ளது.

ஒப்பந்தப்படி பாக் தாத்துக்கு தென்கிழக்கே உள்ள அடாப் எண்ணெய் கிணறுகளை மேம்படுத்த சீனா தொழில்நுட்ப ஆலோசகர்கள், எண்ணெய் ஊழியர்கள் மற்றும் சாத னங்களை வழங்கும் என்று இராக் எண்ணெய் அமைச் சக செய்தி தொடர்பாளர் அசிம் ஜிகாத் கூறினார்.

சதாம் உசேனுடன் 1997-ல் போடப்பட்ட ஒப்பந்தம் தற்போது மறு பேச்சு வார்த்தைக்குப்பின் இறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

சீனர்களுக்கு போது மான பாதுகாப்பு அளிக்கப் படும் என்றும் சீனாவும் பாதுகாப்பாளர்களைக் கொண்டு வரலாம் என்றும் இராக் கூறியது. பல அன் னிய எண்ணெய் நிறு வனங்கள் பாதுகாப்பு கருதி இராக்குக்கு வர மறுத்த வேளையில் சீனா அங்கு வந்ததை இராக்கியர்கள் மறக்கமாட்டார்கள் என் றும் அசிம் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் 22 ஆண் டுகளுக்கு செல்லுபடியா கும்.

இங்கு நாளொன்றுக்கு 90 ஆயிரம் பீப்பாய் எண் ணெய் கிடைக்கும். இராக் தினந்தோறும் 25 லட்சம் பீப்பாய் எண்ணெய் எடுக்கி றது.

வரும் 5 ஆண்டுகளில் இதை 45 லட்சமாக உயர்த்த இராக் திட்டமிட்டுள்ளது. ஒப்பந்தம் பற்றி கருத்துக்கூற அமெரிக்க தூதரகம் மறுத்து விட்டது.

Exit mobile version