21.11.2008.
பாதுகாப்பு குறித்து இராக்குக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை எதிர்த்து முன்னணி ஷியா மதகுருவான மொக்தடா அல் சதர் ஆயிரக்கணக்கான மக்களை அணிதிரளச் செய்துள்ளார்.
இந்த வார முற்பகுதியில் நூரி அல் மலிக்கி அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால், அதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் தேவையாகும்.
இராக்கில் இருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற சதர் அவர்களுக்கு ஆதரவானவர்கள், இன்று பாக்தாதில் ஊர்வலமாகச் சென்று, 5 வருடங்களுக்கு முன்னர் சதாம் ஹுசைனின் சிலை இருந்து உடைத்து வீழ்த்தப்பட்ட சதுக்கத்தை சுற்றிவளைத்தனர்.
கணிசமான சுனி இன முஸ்லிம்களும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டதாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
BBc.