
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி மும்பையில் உள்ள வன்கடே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக இந்தியா செல்லவுள்ளார்.
மகிந்த குடும்ப உறுப்பினர்கள் 300 பேர் வரை பயணம் செய்வதற்காக ஒரு விமானமும், ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம்செய்வதற்காக மற்றொரு விமானமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மக்கள் நாளாந்த உணவிற்காகத் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் மகிந்த குடும்ப உறுப்பினர்களின் ஆடம்பர வாழ்க்கை முறை குறித்து தமிழ்ப் பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் விரக்திக்குள்ளாக்கப்டுவர் என சிங்கள ஊடகவியலாளட் ஒருவர் தெரிவித்தார்.