Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி சிரிசேன கைப்பற்றிய மல்ரி பில்லியன் வியாபாரம்

SEA-ME-WE-4-Routeசிறீ லங்கா ரெலிகொம் உலகத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உலகின் பல்தேசிய வியாபாரத்திற்குச் சேவை செய்யும் ஆசியாவின் பிரதான முனையாக சிறீ லங்கா ரெலிகொம் மாறியுள்ளது. தெற்காசியாவிலிருந்து மத்திய கிழக்கு ஊடாக மேற்கு ஐரோப்பாவை இணைக்கும் திட்டம் ஒன்றைப் பல நாடுகளதும் நிறுவனங்களதும் நிதி உதவியுடன் சிறீலங்கா ரெலிகொம் நடத்தி வருகிறது. சீ,மீ.வீ (South East Asia–Middle East–Western Europe 4 (SEA-ME-WE 4))என அழைக்கப்படும் இத்திட்டத்தின் மூன்று பகுதிகள் நிறைவுற்று நான்காவது பகுதி இப்போது நடைபெற்றுக்க்கொண்டிருக்கிறது. மல்ரி பில்லியன் பெறுமானமுள்ள இத்திட்டத்திம் பல்தேசிய நிறுவனங்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் பொன் முட்டையிடும் வாத்து.

லைக்கா மொபைல் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஊழல் ஊடாக மகிந்த அரசு தனது குடும்பத்தை இத் திட்டத்துக்குள் உள் நுளைத்தது. மகிந்த ராஜபக்சவின் மருமகன் சமீந்திர ராஜபக்ச சிறீ லங்கா ரெலிகொம் இன் இயக்குனரானார்.

சீ மீ வீ (SEA-ME-WE 4)என அழைக்கப்படும் இத் திட்டத்திற்கும் அமெரிக்க அரசின் ஆசிய ஆக்கிரமிப்புத் திட்டத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. 18,800 மீட்டர்கள் நீளமான கடலடித் தொடர்பு இணைப்புக்கள் குறுகிய கால எல்லைக்குள்  தெற்காசியாவிலிருந்து மத்திய கிழக்கு ஊடாக இன்டர்நெட்டின் முதுகெலும்பாகத் (backbone network)தொழிற்படும்.

சீ மீ வீ திட்டத்தின் முகாமைத்துவத்தை சிறீ லங்கா ரெலிகொம் நிறுவனமே கவனித்துக்கொள்கிறது. இலங்கையை அடிப்படையாகக் கொண்டே சீ மீ வீ திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சிறீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஐம்பது வீதமான பங்கு மலேசியத் தமிழ் மில்லியனேர் அனந்த கிருஷ்ணனின் கைகளில் முடங்கியுள்ளது. அதனையும் மிகுதிப்பகுதியைம் நிர்வகிப்பதற்குரிய இயக்குனராக இன்றைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிரிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இது சிரிசேன குடும்பத்தின் முதலாவது பெரிய வியாபாரத் தலையீடாகக் கருதப்படுகிறது. சிரிசேன ஆட்சிக்குவந்து இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே அவரது குடும்பம் மல்ரி பில்லியன் வியாபாரத்தில் ஏறி அமர்ந்துகொண்டது.

இம்முறை ராஜபக்ச குடும்பத்தின் ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து ‘ஜனநாயகம்’ மீட்ட ஊடகங்களதும், அரசியல் வாதிகளதும் ஆதரவோடு சிரிசேன குடும்பம் இலங்கையை அடகுவைக்கும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது.

https://lk.linkedin.com/in/shameendra

CoolNickname – Creating the Best Nicknames and Names🏆

Exit mobile version