லைக்கா மொபைல் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஊழல் ஊடாக மகிந்த அரசு தனது குடும்பத்தை இத் திட்டத்துக்குள் உள் நுளைத்தது. மகிந்த ராஜபக்சவின் மருமகன் சமீந்திர ராஜபக்ச சிறீ லங்கா ரெலிகொம் இன் இயக்குனரானார்.
சீ மீ வீ (SEA-ME-WE 4)என அழைக்கப்படும் இத் திட்டத்திற்கும் அமெரிக்க அரசின் ஆசிய ஆக்கிரமிப்புத் திட்டத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. 18,800 மீட்டர்கள் நீளமான கடலடித் தொடர்பு இணைப்புக்கள் குறுகிய கால எல்லைக்குள் தெற்காசியாவிலிருந்து மத்திய கிழக்கு ஊடாக இன்டர்நெட்டின் முதுகெலும்பாகத் (backbone network)தொழிற்படும்.
சீ மீ வீ திட்டத்தின் முகாமைத்துவத்தை சிறீ லங்கா ரெலிகொம் நிறுவனமே கவனித்துக்கொள்கிறது. இலங்கையை அடிப்படையாகக் கொண்டே சீ மீ வீ திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இது சிரிசேன குடும்பத்தின் முதலாவது பெரிய வியாபாரத் தலையீடாகக் கருதப்படுகிறது. சிரிசேன ஆட்சிக்குவந்து இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே அவரது குடும்பம் மல்ரி பில்லியன் வியாபாரத்தில் ஏறி அமர்ந்துகொண்டது.
இம்முறை ராஜபக்ச குடும்பத்தின் ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து ‘ஜனநாயகம்’ மீட்ட ஊடகங்களதும், அரசியல் வாதிகளதும் ஆதரவோடு சிரிசேன குடும்பம் இலங்கையை அடகுவைக்கும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது.
https://lk.linkedin.com/in/shameendra