Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரண்டு இனக்கொலையாளிகள் நன்றி தெரிவித்தனர்

modi_mahinthaஇனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கு இந்தியாவின் இனக்கொலையாளி நன்றி தெரிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்தமைக்காக இந்தியப் பிரதமரும் குஜராத் இனப்படுகொலையைத் தலைமை தாங்கியவருமான நரேந்திர மோடி இலங்கையில் வன்னிப் படுகொலைகளைத் தலைமையேற்று நடத்திய மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்தார். இரண்டு அரச பயங்கரவாதிகளும் சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் சந்தித்துக்கொண்ட போதே மோடி நன்றி தெரிவித்ததாக இந்திய வெளியுறவுத்துறைப் அக்பருதீன் தனது ரிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நிறுவனமான பிரிடிஷ் அமெரிக்கன் டொபாக்கோஸ் இன் இந்தியத் துணை நிறுவனமான இன்டியன் அமெரிக்கன் டொபாக்கோஸ் இலங்கையில் 300 மில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டை மேற்கொண்டுள்ளது.
இலங்கை அரசால் இலவசமக வழங்கப்பட்ட நிலத்தில் ஆடம்பர விடுதிகளையும் ஐந்து நட்சத்திர ஹோட்டேல் ஒன்றையும் கட்டுவதற்கான களியாட்ட நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. தவிர, இலங்கையின் வரலாற்றுப் புகழ் மிக்க சிலேவ் ஐலலண்ட் பகுதியில் இலங்கை மக்களின் 90 ஏக்கர் நிலம் டாட்டா நிறுவனத்திற்கு ராஜபக்சவினால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களுக்குத் மரணதண்டனை விதித்து அவர்களை விடுதலை செய்யும் நாடகத்தை இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்தியதன் பின்னணியில் இப் பல்தேசியக் கொள்ளை நடைபெறுகிறது.

மோடி மகிந்தவை அழைத்து கௌரவிப்பதன் பின்புலம்

இனப்படுகொலையில் விதைத்ததை அறுவடை செய்யும் இந்திய நிறுவனத்தின் 300 மில்லியன் டொலர்கள்

Exit mobile version