Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரண்டு இனக்கொலையாளிகள் உலகின் கொலை நகரில் சந்தித்துக்கொள்கின்றனர்

handshakeதானே உருவாக்கிய ஐ.எஸ் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் மீது வான்வெளித் தாக்குதல்களை நடத்துவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் இரண்டு இனக்க்கொலையாளிகள் நியூயோர்க்கில் சந்திக்கின்றனர். நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக மோடியும் மகிந்த ராஜபக்சவும் நியூயோர்க் நகருக்குச் செல்கின்றனர். உலகில் போரால் அழிந்துபோகும் மனிதர்களின் தலைவிதி நிச்சயிக்கப்படும் இடமான நியூயோர்க்கில் மோடி மகிந்த என்ற இரண்டு இனக்கொலையாளிகள் சந்திக்கவுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாதம் 27 ஆம் திகதி மோடியும் மகிந்தவும் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

இலங்கையில் நடத்தப்பட்ட இனக்கொலையின் பின்னணியில் இந்திய ஆளும்வர்க்கமும் செயற்பட்டது. ஆளும் வர்க்கம் தமது தேவைக்கேற்ப தமது பிரதிநிதிகளை மாற்றிக்கொள்ளும். இன்றைய உலகப் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஏற்ற ஆளும் வர்க்கப் பிரதினிதிகளாக மோடியும் மகிந்தவும் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வைகோவிலிருந்து புலம்பெயர் நாடுகள் வரையான இனவாதிகள் மோடியை ஆட்சியிலேற்றினால் ஈழம் கிடைக்கும் என்ற எல்லைவரை மக்களை ஏமாற்றினார்கள். இந்திய வெளியுறவுக்கொள்கையை அங்குள்ள ஆளும் வர்க்கமே தீர்மானிக்கும் என்ற அடிப்படை உண்மைய மறைத்து தனி நபர்களும் கொள்கை வகுப்பாளர்களும் தமிழர்களுக்கு எதிராக மாறுவார்கள் என்றனர். கடந்த 30 வருடங்களாக மக்களிடமிருந்து உண்மைகளை மறைத்து அவர்களை ஏமாற்றியவர்கள் இன்னும் நிறுத்தாமல் தொடர்கிறார்கள். இனக்கொலையாளிகள் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.

Exit mobile version