Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட ஆஸி. கப்பல் கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலியாவில் ‘ஏ.எச்.எஸ். சென்டார்’ என்ற கப்பல் இருந்தது. இது ஆஸ்பத்திரி போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் 332 பேர் பணி புரிந்தனர். இவர்களில் 268 பேர் தாதியர்.

இரண்டாம் உலகப் போரின் போது, அதாவது 1943ஆம் ஆண்டு மே 14ஆந் திகதி இக்கப்பல் ஜப்பான் நீர்மூழ்கி கப்பலால் தண்ணீருக்குள் குண்டு வீசி தகர்க்கப்பட்டதும் இது கடலில் மூழ்கியது.

இந்தக் கப்பலில் இருந்து 64 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. மற்றவர்கள் கடலுக்குள் பலியாகினர் . இந்த சோக சம்பவம் ஆஸ்திரேலியாவில் இன்னமும் மறையவில்லை.

இந்நிலையில் இந்த கப்பலைத் தேடும் பணி நடந்து வந்தது. தற்போது இக்கப்பல் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் பிரிஸ்பேன் நகர் பகுதியில் மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் மூழ்கித் தேடுபவர்கள் இதைக் கண்டு பிடித்துள்ளனர். இது கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் கிடப்பது தெரிய வந்துள்ளது. எனவே, இந்தக் கப்பலை வெளியே எடுக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டுள்ளது.

இதற்கான பணி அடுத்தமாதம் தொடங்கவுள்ளது. கப்பல் மூழ்கி கிடக்கும் இடத்தில் சக்தி வாய்ந்த அதிநவீன கேமராவை இறக்கி போட்டோ எடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கப்பலை வெளியே எடுக்கும் பணி நடைபெறும்.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் ஜுலியா திவார்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

” ‘ஏ.எச்.எஸ். சென்டார்’ கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சோகம் நம் மனதில் இருந்து இன்னமும் மறையவில்லை அக்கப்பலில் பணிபுரிந்த வீரம் செரிந்த 268 தாதியர் மற்றும் ஊழியர்கள் பலியாகினர்.

அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் சோகத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. அக்கப்பலை கண்டுபிடித்துள்ளதன் மூலம் ஓரளவு அவர்களின் சோகம் மறையும். அவர்களின் மனம் சமாதானமடையும் எனக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version