இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தினால் பல்வேறு சர்ச்சைகள் தோன்றியுள்ளன. இரணைமடுக் குளத்திலிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டுசெல்லும் சர்ச்சையை தோற்றுவித்து பிரதேச முரண்பாட்டை சிங்கள பௌத்த பெருந்தேசியவாதக் கும்பல் முயற்சிக்கிறது.
வடக்கில் எரியும் பிரச்சனைகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ள இரணைமடுக் குள நீர் வினியோகம் தொடர்பான சர்ச்சைகள் திட்டமிட்ட பிரித்தாளும் முயற்சியாகும். சிங்கள பௌத்த பேரினவாதிகளின் இத்திட்டம் யாழ்ப்பாணத்தில் தமக்கு ஆதரவைத் திரட்டிக்கொள்ளவும் பிரதேசங்களிடையே முரண்பாடுகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
தம்முடைய விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அமைக்கப்பட்ட குளத்து நீர், தம்முடைய விவசாய நடவடிக்கைகளுக்கு போதாமல் இருப்பதாகவும் இந்த கலந்துரையாடலின் விவசாய சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாண விவசாயிகள் நீர் வினியோகத்தை நிராகரிப்பதும் இயற்கை விவசாயத்தின் மாற்றுவழிகளைப் பயன்படுத்துவதும் பேரினவாதத்தின் சூழ்ச்சியிலிருந்து விடுதலையடைவதற்கான அடிப்படை வழிமுறைகள்.