Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரட்டைவேடத்தில் முன்னணியில் திகழ்வது யார் : கருணாநிதி ஜெயலலிதா போட்டி

Jayalalitha-Karunanidhi16-4-2002ல் தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானத்தில், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசின் அனுமதியோடு, இந்திய ராணுவத்தை இலங்கை அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினாரே, அது இரட்டை வேடம் இல்லையா? கபட நாடகம் இல்லையா? ஜெயலலிதா விளக்குவாரா?

அப்பாவி ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தபோது, இறுதி போர் நடத்திய நேரத்தில், ராஜபக்ஷே நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல, விடுதலைப் புலிகளை எதிர்த்துதான் என்று ஜெயலலிதா கூறினாரா, இல்லையா? அது இரட்டை வேடம் அல்லவா?

ராஜபக்சே அரசு கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தபோது, 17-1-2009ல், இலங்கை தமிழர்களை கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை, ஒரு யுத்தம் – ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று திருவாய் மலர்ந்தாரே, அது இரட்டை வேடமா? கபட நாடகமா?

இவ்வளவையும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக செய்துவிட்டு, தற்போது மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதே நேரத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிப்பதை எதிர்த்து, போராட்டம் நடத்திய 136 பேர் ஜெயலலிதா அரசின் காவல் துறையால் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது. கடிதத்தில் தெரிவித்து இருக்கும் கருத்துகள் உண்மையா? போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது உண்மையா? எது இரட்டை வேடம் என்பதை ஜெயலலிதா விளக்குவாரா?

-இவ்வாறு வன்னிப் படுகொலையை நிகழ்த்துவதற்கு இலங்கை அரசுடன் இணைந்து இரட்டைவேடம் போட்ட கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுவரை ஈழத்தமிழர் பிரச்சனைக்காக தமிழர்கத்திலிருந்து புலம் பெயர் நாடுகளை நோக்கி குரல்கொடுப்பதாகக் கூறும் அனைத்துப் பிழைப்புவாதிகளும் இந்த இரு வேடதாரிகளையும் சார்ந்தே செயற்படுகின்றனர்.

Exit mobile version