Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரகசிய முகாம்கள் தொடர்பான இரகசியத் தகவல்களை மைத்திரியிடம் கூறிய விக்னேஸ்வரன்

vikneswaranஇந்த இரகசிய முகாம்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். இலங்கையின் பல இடங்களில் குறிப்பாக மஹரகம, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இரகசிய முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் காணாமல் போனவர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் எமக்கு சில இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன என வட மாகாண முதலமைசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த விக்னேஸ்வரன், இந்த விடயம் தொடர்பாக நாம் அரசாங்கத்துக்கும், தனிப்பட்ட வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம். “அவ்வாறான முகாம்கள் இருக்கின்றன என உங்களுக்கு எவ்வாறு தெரியும் என அவர்கள் எங்களிடம் கேட்டபோது நாம் அதனை அவர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கின்றோம். இரகசிய முகாம்களில் உள்ளவர்களை முதலில் அடையாளம் காணவேண்டும். அதன் பின்னர் அவர்களை விடுவிப்பது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம். எனவே ஆக்க பொறுத்த நாம் ஆறபொறுக்கவேண்டும். ஏனெனில் இரகசிய முகாம்கள் என்பதனால் அவை தொடர்பில், நாம் விசாரணைகளை முன்னெடுக்க முடியாமலிருக்கின்றது.

சிறைகளிலும் மற்றும் நலன்புரி முகாம்களிலும் அடையாளம் காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை வெசாக் தினமான எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்டிருக்கின்றோம். அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம்” என முதலமைச்சர் கூறினார்.

கைதிகள் தொடர்பான இரகசியத் தகவல்கள் தெரிந்திருந்தால் அவர்கள் அழிக்கப்பட முன்னர் தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதே கைதிகளுக்குப் பாதுகாபானது. மகிந்த பாசிசத்தோடு ஒட்டிக்கொண்டிருந்த மைத்திரிபால சிரிசேனவிடம் முறையிடுவதற்குப் பதிலாக இரகசிய முகாம்கள் தொடர்பாக மக்களிடமும் ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமும் முறையிடுவதே கைதிகளை அழிவிலிருந்து பாதுகாக்கும்.

Exit mobile version