தென்னிந்திய உயர் மத்தியதரவர்க்கத்தின் வாழ்வை குறைந்த செலவில் அதிக வருவாய் தரும் வகையில் திரைப்படமாக உருவாக்கிப் புகழ்பெற்ற தென்னிந்திய சினிமா இயக்குனர் பாலச்சந்தர் தனது 84வது வயதில் காலமானார். மத்தியட்ஷரவர்க்கத்தின் மேலணிகளைச் சார்ந்த பெண்ணுரிமை, ஒழுக்கம், குடும்ப உறவுகள் போன்ற பல்வேறு சமூகப்பிரச்சனைகளைப் பேசுவதற்கான வெற்றிடம் காண்பப்பட்ட காலத்தில் அவற்றை திரைப்படங்களாக இயக்கி வெற்றிபெற்றார். மத்தியதரவர்கக் குடும்பங்களின் மீதான அனுதாபத்தைத் தோற்றுவிக்கும் வகையிலும் அவர்களின் மென்மையான உணர்வுகளைத் தொடும் வகையிலும் பேசிய பாலசந்தரின் திரைப்படங்கள் வணிக வெற்றியீட்டின. தென்னிந்தியாவின் வணிகக் நட்சத்திரங்களின் பயிற்சிப்படறையாக பாலச்சந்தர் திகழ்ந்தார்.
இயக்குனராக மட்டுமல்ல கவிதாலயா என்ற பெயரில் நடக்கும் மில்லியன்கள் புரளும் படத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரும் பாலச்சந்தரே.
முழுமையாக வணிகமயமாக்கப்பட்ட மாய உலகமான தென்ந்திய சினிமாவில் பாலச்சந்தர் முன்னோடியாகக் கருதப்பட்டார். இயக்குனட் சிகரம் எனப் பெயர்சூட்டப்பட்டார்.
80 களில் தமிழ் நாட்டில் தங்கியிருந்த ஈழ விடுதலைப் போராளிகளை வன்முறையாளர்களாகச் சித்தரித்து பாலச்சந்தர் இயக்கிய படமான புன்னகை மன்னன் அக்காலத்தில் ஈழப் போராளிகள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இன்று தமிழ்த் ‘தேசிய’ ஊடகங்கள் பாலச்சந்தரை ‘இயக்குனர் சிகரம்’ என விழித்து புகழ்பாடுகின்றன.